பள்ளி மாணவர்களின் பாரம்பரிய நெல் நடவு விழா
நடவு விழாவில் கோனூர்நாடு பகுதியில் உள்ள மாணவர்கள்
ச.தருன் திராவிடன் (9ஆம் வகுப்பு)
ச.டிராவிட் (7ஆம் வகுப்பு)
ஆ.நவின் (9ஆம் வகுப்பு)
அ.அரசீலன் (8ஆம் வகுப்பு)
கி.சிரஞ்சீவி (8ஆம் வகுப்பு)
கி.கிரிவரதன் (6ஆம் வகுப்பு)
ரா.சமரன் (6ஆம் வகுப்பு)
த.யாழினி (9ஆம் வகுப்பு)
ந.தமிழினியாள் (6ஆம் வகுப்பு)
ச.யாழினி (6ஆம் வகுப்பு)
மு.துர்கா (4ஆம் வகுப்பு)
சே.காவியப்பிரியன் (8ஆம் வகுப்பு)
ஆ.சிந்து (5ஆம் வகுப்பு)
வசந்த் (9ஆம் வகுப்பு)
வி.பௌசிகா (1ஆம் வகுப்பு)
ஜோ.சத்யா சட்ட கல்லூரி மாணவி மற்றும் பலர்
கலந்து கொண்டு நம் முன்னோர்களின் மரபு விதைகள் மற்றும் விவசாயத்தை மீட்டு எடுக்க உறுதி மொழி எடுத்துக்கொண்டதோடு சுமார் ஒரு ஏக்கர் அளவில் நடவு நட்டனர்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூர் முன்னால் வேளாண் துணை இயக்குனர் திரு முரளி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இளம் விவசாயிகள் ம.சங்கர், ரெ.சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விதையால் ஆயுதம் செய் விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.தவச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதல்படி செயர்பாட்டாளர்கள் ச.சந்திரசேகரன் மற்றும் செ.ராமன் ஆகியோர் நடவு விழாவை முன்னின்று நடத்தினார்கள்.
ஐந்து ஆண்டுகளாக சாகுபடிசெய்த மரபு வழி நெல் ரகங்களான கருங்குருவை, பூங்கார், மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, ஆத்தூர் கிச்சலி சம்பா, இலுப்பைபூ சம்பா, சேலம் சன்னா, சொர்னமயூரி, தூயமல்லி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கருங்குருவை பாயாசம், கருங்குருவை கஞ்சி, பிரண்டை துவையல் உணவு வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் பஞ்சகாவ்யா, மீன் அமிலம், பூச்சி விரட்டி தயாரிப்பது எப்படி என்று செய்முறை விளக்கம் அளித்தனர்.



No comments:
Post a Comment