சிங்கினிக்கார் பாரம்பரிய நெல் ரகத்தின் சிறப்புகள்
சிங்கினிக்கார் :
தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் 🌾🌾வகைகளில் ஒன்று.
சிறு செலவில் பயிராகும் நெல் இரகம்.
மழை, நீர் தேக்கத்திலும் இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய வல்லமைக் கொண்டது.
இந்த இரகம் புழுதி விதைப் புக்கும் . நாற்று விட்டு நடவு செய்யவும் ஏற்றது .
இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த இரகம் 165 180 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது .
அடர்பழுப்புநிற அரிசியையும் , மோட்டா ரக நெல் வகையையும் கொண்ட இந்த இரகத்தின் 1000 நெல் மணிகளின் எடை 26 கிராம் ஆகும் .
இந்த இரகம் இட்லி , தோசை , பலகாரம் செய்ய ஏற்றது .
காலம் :
110-115 நாட்கள்
மகசூல் :
ஒரு ஏக்கரில் 850 கிலோ தானிய மகசூலும் , 40 கட்டுகள் வைக்கோல் மகசூலும் தரவல்லது.
மருத்துவ குணங்கள் :
இந்த இரகம் சர்க்கரை அளவினைக் குறைக்கும் , எலும்புகளை உறுதிப்படுத்தும் , மூட்டுவலிக்கு சிறந்த இரகமாகும்
No comments:
Post a Comment