கருங்குறுவை பாரம்பரிய நெல் ரகத்தின் சிறப்புகள்
கருங்குறுவை :
தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் 🌾🌾வகைகளில் ஒன்று.
கர்நாடகம், கேரளா மாநில ங்களிலும் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த இரகம் அதிக மருத்துவ குணங்களை உடையது .
மூன்று அடி வரை வளரக்கூடிய இந்த இரகம் நேரடி விதைப்பிற்கும் , நாற்றுவிட்டு நடவு செய்யவும் ஏற்றது .
இதன் நெல் கருப்பு நிறத்திலும் , அரிசி பழுப்பு நிறத்திலும் இருக்கும் .
இது நடுத்தர மோட்டா இரகமுடைய இந்த இரகத்தின் 1000 நெல் மணிகள் எடை 25 முதல் 26 கிராம் வரை இருக்கும் .
பூச்சி , நோய்களைத் தாங்கி வளரும் .
இந்த இரகம் சற்று சாயும் தன்மையுடையது .
சாப்பாடு மற்றும் இட்லி , தோசை , பலகாரங்கள் செய்ய ஏற்றது .
கருங்குறுவையின் நெல் 🌾🌾 மணிகள் ஓர் ஆண்டு முழுவதும் மக்கி போகாமல் பிறகு முளைக்கும் திறன் உடையது.
அனைத்து வகையான மண்ணிலும் விளையும்.
மகசூல் :
இந்த இரகம் ஒரு ஏக்கரில் 1200 கிலோ வரை மகசூல் தரவல்லது.
காலம் :
110- 120 நாட்கள்
பட்டம்:
குறுவை, சம்பா பட்டத்திற்கு ஏற்றது.
மருத்துவ குணங்கள் :
கருங்குருவை அரிசியினால் "குஷ்டம்" எனப்படும் வெண்புள்ளி மற்றும் விசக்கடியால் ஏற்படும் பக்க விளைவுகளைப் போக்கும் சக்தி உடையது.
இரத்த சோகயை குணப்படுக்கூடியது.
இதனை உண்டு வந்தால் மிகக் கொடிய வியாதியான வாந்தி பேதி (காலரா) மட்டுப்படுவதாக கூறுகிறார்கள்.
சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படும் இந்த இரகத்தில் சாதத்தை மூலிகைகளுடன் கலந்து லேகியம் தயார் செய்து யானைக்கால் நோய்க்கு மருந்தாக கொடுப்பார்களாம் .

No comments:
Post a Comment