Breaking

Monday, June 6, 2022

June 06, 2022

தஞ்சாவூர் மாவட்டத்தின் பசுமை விருது வாங்கிய இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் செல்வி.யாழினி தவச்செல்வன் .

தஞ்சாவூர் மாவட்டத்தின் பசுமை விருது வாங்கிய இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் செல்வி.யாழினி தவச்செல்வன்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் பசுமை விருதை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் ஐயா தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்

இவர் தந்தையார் இயற்கை விவசாயி பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்கிறார் ,விதையால் ஆயுதம் செய்வோம் என்ற அமைப்பு மூலம் பாரம்பரிய நெல் வாசனைசீரக சம்பா.காட்டுயானம் இரண்டு ஆண்டுகளாக நாற்றங்கால் முதல் நடவு வரை இவர்களே செய்கின்றனர்.இயற்கை இடுபொருள் தயாரிப்பு. நெகிழி இல்ல கிரமத்தை உருவாக்குதல்.மரகன்றுகள் வளர்ந்து பசுமை கிரமத்தை நோக்கி பயனிக்கின்றனர்.க.தவச்செல்வன்

 சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் !

Saturday, May 28, 2022

May 28, 2022

தேசிய நெல் திருவிழா 2022

 திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழாவில் உழவனின் நண்பன் விருது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் வழங்கப்பட்டது.



 நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் CMA செ. ராஜீவ் மற்றும் உயர்மட்ட குழு விவசாயிகளுக்கு எனது நன்றிகள்.



ஏர் கலப்பை நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.🙏🥰


Sunday, April 17, 2022

April 17, 2022

தேசிய நெல் திருவிழா - 2022 நாள்: 21.05.2022 மற்றும் 22.05.2022

 ஆதிரெங்கம்

நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்

     NEL JAYARAMAN TRADITIONAL RICE SAVIOUR CENTER

நடத்தும்


உலக புகழ் பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா - 2022

நாள்: 21.05.2022 சனிக்கிழமை மற்றும் 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை காலை: 8.30மணி இடம்: ARV தனலெட்சுமி மஹால், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.

15000 இயற்கை விவசாயிகள் சங்கமிக்கும் திருவிழா... 

பாரம்பரிய நெல் விதைகள் 2 கிலோ உழவர்களுக்கு வழங்குதல்...

 பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்குதல்... 

முன்னோடி விவசாயிகளின் அனுபவ பகிர்வு நடைபெறுதல்... 

விவசாய கண்காட்சி அரங்குகள்...

கிராமிய கலை நிகழ்ச்சிகள்...


முன்னோடி இயற்கை விவசாயிகளின் வழிக்காட்டுதலில் ஒருங்கிணைக்கப்படும் நெல் திருவிழாவிற்கு அனைவரும் கலந்துகொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க கைகோர்ப்போம்.


வருக! வருக!!


விழா ஒருங்கிணைப்பாளர்:

திரு.CMA செ. ராஜீவ், ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்.

அலுவலக எண்: 98437 49663 - 94433 20954 - 99527 87998

April 17, 2022

நம்மாழ்வார் விருது வழங்கினாகள்

Sunday, August 29, 2021

August 29, 2021

குள்ளக்கார் பாரம்பரிய நெல் ரகத்தின் சிறப்புகள் Traditional Paddy Variety

 குள்ளக்கார் பாரம்பரிய நெல் ரகத்தின் சிறப்புகள் 


குள்ளக்கார்:


                தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் 🌾🌾வகைகளில் ஒன்று.


                இந்த இரகம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் , அனைத்து வகையான நிலங்களிலும் தன்னை தகவமைத்துக்கொண்டு வறட்சி மற்றும் நீர் தேங்கிய பகுதிகளிலும் விளைச்சல் தரும் நெல் இரகமாகும்.

                பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக் கொண்டது.

                சிவப்பு நிற அரிசியும் மோட்டா ரக தானிய அமைப்பையும் கொண்ட இந்த ரக நெல் மணிகள் 1000 விதைகள் எடை 28 முதல் 29 கிராம் வரை இருக்கும் .

                இது இட்லி , தோகை , பலகாரங்கள் செய்ய ஏற்ற இரகம் . 


மகசூல் :


            ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ வரை தானிய மகசூலும்,80 கட்டுகள் வைக்கோல் மகசூலும்  தரவல்லது.


காலம்


          105-110 நாட்கள்


பட்டம்:

           குறுவை, சம்பா, கோடை அனைத்து பட்டத்திற்கும் ஏற்றது.


மருத்துவ குணம் :


            பேறு காலத்திற்கு பின் பால் சுரக்கவும் , உடல் கழிவுகளையும் போக்கவல்ல இந்த இரகம் நீரழிவு நோய்க்கும் , இரத்த அழுத்தத்திற்கும் மிகச் சிறந்த இரகமாகும் .


ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்...
   
   CMA செ. ராஜீவ்
    ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு : 9443320954

ஏர் கலப்பை- Er KALAPPAI YouTube channel விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை YouTube SUBSCRIBERS செய்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, ஏர் கலப்பை YouTube channel ன் தொடர்புக்கு 7397061427... YouTube channel : https://www.youtube.com/channel/UC5mi... Facebook page: https://www.facebook.com/ERKALAPPAI/ INSTAGRAM : https://www.instagram.com/suthakar_er... Website : https://er-kalappai.blogspot.com/ Twitter: https://twitter.com/ER_Kalappai?s=09 #ஏர்கலப்பை #நெல்_ஜெயராமன்

Friday, August 27, 2021

August 27, 2021

சிங்கினிக்கார் பாரம்பரிய நெல் ரகத்தின் சிறப்புகள் Traditional Paddy Variety

  சிங்கினிக்கார் பாரம்பரிய நெல் ரகத்தின் சிறப்புகள் 


சிங்கினிக்கார் :


               தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் 🌾🌾வகைகளில் ஒன்று.

               

               சிறு செலவில் பயிராகும் நெல் இரகம்.


               மழை, நீர் தேக்கத்திலும் இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய வல்லமைக் கொண்டது.

               

               இந்த இரகம் புழுதி விதைப் புக்கும் . நாற்று விட்டு நடவு செய்யவும் ஏற்றது . 


               இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த இரகம் 165 180 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது .

               

              அடர்பழுப்புநிற அரிசியையும் , மோட்டா ரக நெல் வகையையும் கொண்ட இந்த இரகத்தின் 1000 நெல் மணிகளின் எடை 26 கிராம் ஆகும் . 

 

               இந்த இரகம் இட்லி , தோசை , பலகாரம் செய்ய ஏற்றது . 


காலம் :


            110-115 நாட்கள்


மகசூல் :


             ஒரு ஏக்கரில் 850 கிலோ தானிய மகசூலும் , 40 கட்டுகள் வைக்கோல் மகசூலும் தரவல்லது.



மருத்துவ குணங்கள் :


             இந்த இரகம் சர்க்கரை அளவினைக் குறைக்கும் , எலும்புகளை உறுதிப்படுத்தும் , மூட்டுவலிக்கு சிறந்த இரகமாகும்



ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்...
   
   CMA செ. ராஜீவ்
    ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு : 9443320954

ஏர் கலப்பை- Er KALAPPAI YouTube channel விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை YouTube SUBSCRIBERS செய்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, ஏர் கலப்பை YouTube channel ன் தொடர்புக்கு 7397061427... YouTube channel : https://www.youtube.com/channel/UC5mi... Facebook page: https://www.facebook.com/ERKALAPPAI/ INSTAGRAM : https://www.instagram.com/suthakar_er... Website : https://er-kalappai.blogspot.com/ Twitter: https://twitter.com/ER_Kalappai?s=09 #ஏர்கலப்பை #நெல்_ஜெயராமன்