குள்ளக்கார் பாரம்பரிய நெல் ரகத்தின் சிறப்புகள்
குள்ளக்கார்:
தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் 🌾🌾வகைகளில் ஒன்று.
இந்த இரகம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் , அனைத்து வகையான நிலங்களிலும் தன்னை தகவமைத்துக்கொண்டு வறட்சி மற்றும் நீர் தேங்கிய பகுதிகளிலும் விளைச்சல் தரும் நெல் இரகமாகும்.
பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக் கொண்டது.
சிவப்பு நிற அரிசியும் மோட்டா ரக தானிய அமைப்பையும் கொண்ட இந்த ரக நெல் மணிகள் 1000 விதைகள் எடை 28 முதல் 29 கிராம் வரை இருக்கும் .
இது இட்லி , தோகை , பலகாரங்கள் செய்ய ஏற்ற இரகம் .
மகசூல் :
ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ வரை தானிய மகசூலும்,80 கட்டுகள் வைக்கோல் மகசூலும் தரவல்லது.
காலம் :
105-110 நாட்கள்
பட்டம்:
குறுவை, சம்பா, கோடை அனைத்து பட்டத்திற்கும் ஏற்றது.
மருத்துவ குணம் :
பேறு காலத்திற்கு பின் பால் சுரக்கவும் , உடல் கழிவுகளையும் போக்கவல்ல இந்த இரகம் நீரழிவு நோய்க்கும் , இரத்த அழுத்தத்திற்கும் மிகச் சிறந்த இரகமாகும் .
No comments:
Post a Comment